மீண்டும் உயர்வா…? ”29,000_த்தை தாண்டியது தங்கம்” பொதுமக்கள் அதிர்ச்சி…!!

கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு 330 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் மீண்டும் 29 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை கடந்த வாரம் குறைய தொடங்கியது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்து சவரன் 29 ஆயிரம் ரூபாயை கடந்தது. சென்னையில் இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு 42 ரூபாய்யும் ,  சவரனுக்கு 336 ரூபாய் உயர்ந்துள்ளது.

இதனால் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 3, 626 க்கும் , ஒரு சவரன் 29, 008 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் 8 கிராம் தங்கம் 30, 264 விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் 50 ரூபாய் 40 காசுக்கும் , ஒரு கிலோ 50, 400 ரூபாய்-க்கும் விற்பனையாகிறது.