” பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டிப்பு ” செவிலியர் பிரசவம் பார்த்ததால் விபரீதம்…!!

காஞ்சிபுரம் கூவத்தூர் மருத்துவமனையில் பிரசவத்தின் போது குழந்தையில் தலை தூண்டன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செல்லமுத்து மகள் பொம்மி என்ற பெண்ணுக்கு இன்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது . 108 ஆம்புலன்ஸில் ஏற்றி கூவத்தூர் பிரசவத்திற்க்காக அங்குள்ள கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கபட்டார் . சுக பிரசவ வாடில் அனுமதிக்கப்பட்ட பொம்மிக்கு வயிற்று வலி ஏற்பட்டு பிரசவம் நடைபெற்றது. அப்போது பொம்மியின் வயிற்றில் இருந்த குழந்தையை சுக பிரசவத்தில் வெளியே எடுக்கும் போது தலை துண்டானது.

Image result for பிரசவத்தின் போது குழந்தை தலை துண்டானது

இதையடுத்து குழந்தையின் தலை தூண்டானதால் உடல் பகுதி பொம்மியின் வயிற்றில் இருந்து போராடி மீட்கப்பட்டது .இதையடுத்து பொம்மி செங்கல்பட்டு அரசு மருத்துமனையில்  சிகிக்சை பெற்று வருகின்றார். சுக பிரசவத்தில் குழந்தையை வெளியே எடுக்கும் போது தலை தூண்டன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். செவிலியர் பிரசவம் பார்த்ததே இந்த நிலை என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.