“நாயின் வாயில் குழந்தை” பார்த்தவுடன் பதறிய ஊழியர்கள்…. மருத்துவமனையில் பரபரப்பு….!!!

மருத்துவமனை வளாகத்தில் இறந்த குழந்தையின் உடலை நாய் கவ்விக் கொண்டு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரியில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் நாய் ஒன்று இறந்த பச்சிளம் குழந்தையின் உடலை வாயில் வைத்து எடுத்து வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் நாயை துரத்தி குழந்தையை மீட்டு பார்த்தனர்.

அதில் அந்த குழந்தை குறைபிரசவத்தில் பிறந்ததால் இருந்திருப்பது தெரிய வந்தது. பின்னர் குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த தர்மபுரி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.