விளையாடிக் கொண்டிருந்த குழந்தை…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கள்ளிக்குப்பம் பகுதியில் அருள் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் அருள் வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி வீட்டில் உணவு சமைத்து கொண்டிருந்தார். இதில்  அவர்களின் குழந்தை ருத்ரா விளையாடி கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து விட்டார். இதனையடுத்து குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

இதனைதொடர்ந்து குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக செங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக குழந்தை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.