பிறந்த 6 மாதத்திலேயே…. வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட விலங்கு…. வனத்துறையினரின் தகவல்….!!!

தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட ஆறுமாதக் குட்டி யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மோதிரமலை, கோதையார், குற்றியாறு உள்ளிட்ட 15 மலை கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. மேலும் குற்றியாறு ஆற்றுப் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டதால் தரைப்பாலம் உடைந்து அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் அப்பர் கோதையார் பகுதியில் பெய்த கனமழை காரணமாக காற்றாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அந்த வெள்ளத்தில் பெரிய விலங்கு ஒன்று அடித்துச் செல்லப்படுவதை வனத்துறையினர் கண்டனர்.

எனவே அதனை வனத்துறையினர் தேடி சென்றனர். இந்தநிலையில் பேச்சிப்பாறை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் இருந்த நிலையில் குட்டியானை ஒன்று கிடப்பதை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் தண்ணீரில் இறந்த நிலையில் கிடந்த குட்டி யானையை பார்வையிட்டனர். அப்போது அது பிறந்து 6 மாதமே ஆன குட்டி யானை என்பது தெரியவந்தது. பின்னர் வனத்துறை அலுவலகம் அருகே இறந்த குட்டி யானையை வனத்துறையினர் கொண்டு வந்தனர். இதனை அடுத்து களக்காடு புலிகள் சரணாலய மருத்துவ குழுவினர் குட்டி யானையின் உடலை ஆய்வு செய்து அங்கேயே  அடக்கம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *