விவசாய பிரச்சனைக்கு தீர்வு காணாமல் வேலூர் தேர்தலை நடத்தக் கூடாது என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அய்யாக்கண்னு போராட்டத்தில் ஈடுபட்டார்.
விவசாய கடனை தள்ளுபடி செய்யவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லிலியில் உள்ள சந்தர் மந்தரில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியவர் அய்யாக்கண்னு. ஆனால் இவர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தியும் பலனும் இல்லை. இந்நிலையில் வேலூர் மக்களவை தேர்தலை நடத்தக் கூடாது என்று படுத்து புரண்டு அய்யாக்கண்ணு போராட்டம் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மக்களவைக்கு நிறுத்தி வைக்கப்பட்ட 5-ஆம் தேதி தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் 5_ஆம் தேதி நடைபெறுமென்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டுமென்றும் ,
விவசாய பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் வேலுார் தொகுதி மக்களவைத் தேர்தலை நடத்தக் கூடாது என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அய்யாக்கண்னு படுத்து , உருண்டு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அய்யாக்கண்ணை மாவட்ட ஆட்சித்தலைவர் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.