சேலத்தில் மழைநீர் சேகரிப்பு,மரம் வளர்ப்பு, போன்றவை குறித்து ரஜினி மக்கள் மன்றம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள உழவர் சந்தை முன்பு மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பு ,பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து ரஜினி மக்கள் மன்றம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உழவர் சந்தையில் இருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் துணி பைகள் வழங்கப்பட்டதோடு, பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தைக் தவிர்க்குமாறும் அறிவுறுத்தபட்டது.

முன்னதாக அப்பா வைத்தியம் சாமி கோவிலிலிருந்து உழவர்சந்தை வரை ஊர்வலமாக சென்றனர். உழவர் சந்தை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மட்டுமே முறையாக அனுமதி பெற்ற நிலையில், உரிய அனுமதியின்றி பேரணியாக சென்றதால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் காய்கறி வாங்கிக் கொண்டு உழவர் சந்தையை விட்டு வெளியே வர முடியாத சூழலும் ஏற்பட்டது.