சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி… போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஏடிஎம் அனைத்து மகளிர் கல்லூரியில் மாவட்ட போலீஸ் துறை சார்பாக சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் முன்னிலை வகித்தார். சப்-இன்ஸ்பெக்டர் திருக்குமரன் வரவேற்றுப் பேசியுள்ளார்.

இந்நிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி கூறியதாவது, வங்கி தொடர்பான எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணை மற்றவர்களிடம் பகிர வேண்டாம். மேலும் சமூக ஊடகங்களில் முகம் தெரியாதவர்களிடம் நெருங்கி பழகுவது மிகவும் ஆபத்தானது என கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில்  கல்லூரி முதல்வர், பேராசிரியர் மற்றும் மாணவிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.