ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நிதி ஆயோக் சிறப்பு ஆலோசகர் ஸ்ருதி கண்ணா ஆய்வு மேற்கொண்டார்.
ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நிதி ஆயோக் சிறப்பு ஆலோசகர் ஸ்ருதி கண்ணா ஆய்வில் ஈடுபட்டார் . அதில் ,நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் தேவைகள் குறித்து ஆய்வு செய்த அவர், சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் மத்திய அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைகின்றதா என்றும் விழிப்புணர்வு முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும் தொற்றும் நோய்கள் , தொற்றா நோய்கள் குறித்தும் மர்ம காய்ச்சல்கள் குறித்தும் அதிக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார். இதையடுத்து அறுவை சிகிச்சை நிபுணர்களை சந்தித்து சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். அதன் பின் தொடர்ந்து ஆய்வை மேற்கொண்ட அவர் ஆரம்ப சுகாதார நிலையங்கள் கல்வி வளர்ச்சி உள்ளிட்ட பணிகள் குறித்தும், ஆய்வு மேற்கொண்டு மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.