“வேட்டையை தடுப்பதில் கில்லாடி” விருது வாங்கி அசத்தும் குவாமி நாய்..!!

உயிரியல் பூங்காவில் விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுப்பதில் கில்லாடியாக செயல்பட்டு வரும் ஜெர்மன் ஷெப்பர்டு இன நாய்க்கு விருது வழங்கப்பட்டுள்ளது

அசாமில் உள்ள காசிரங்கா உயிரியல் பூங்காவில் வேட்டைக்காரர்கள் அத்துமீறி நுழைந்து புலிகள் காண்டாமிருகங்கள் போன்ற வன விலங்குகளை சுட்டுக் கொல்கின்றனர், இவற்றை தடுப்பதற்காக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு குழுவில், குவாமி என்ற ஜெர்மன் ஷெப்பர்டு இன நாயும் இடம் பெற்றுள்ளது. இந்த குவாமி நாய் கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து இப்பணியில்  ஈடுபட்டுள்ளது.

Image result for A wildlife sniffer dog from Biswanath Wildlife Division has won the popular Super Sniffer Dog award. The German shepherd dog

விஸ்வநாத் என்ற பகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் குவாமி  கடந்த ஆண்டு மட்டும் 12 காண்டாமிருகங்கள் கொம்புக்காக வேட்டையாடப்பட இருந்ததை  தடுத்துள்ளது. மேலும் புலிகளை வேட்டையாட வருவதையும் தடுத்து  சிறப்பாக பங்காற்றி வருகிறது. இந்த பங்களிப்புக்காக நேற்று நடைபெற்ற சர்வதேச புலிகள் தினத்தையோட்டி இந்த குவாமி நாய்க்கு விருது வழங்க பட்டுள்ளது.

Image result for A wildlife sniffer dog from Biswanath Wildlife Division has won the popular Super Sniffer Dog award.

குவமியின்  சாகசங்களை பறைசாற்றும் வகையில் உயிரியல் பூங்கா சார்பில் புதிய பேஸ்புக் பக்கமும்  தொடங்கப்பட்டுள்ளது. ஒரு ராணுவ வீரர்களின் செயல்பாடுகளில்  நான்கில் 1 பங்கு அளவுக்கு சிறப்பாக செயல்படுவதால் குவார்ட்டர் ஆஃப் ஆர்மி என்ற பொருளில் இதற்கு குவாமி  என்று பெயரிடப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *