பெண் காவலருக்கு சிறந்த புலனாய்வுக்கான விருது… மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!

சேலம் பெண் காவல் ஆய்வாளருக்கு சிறந்த புலனாய்வு காண விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் காவல்துறை அதிகாரிகளுக்கு சிறந்த புலனாய்வு காண விருது ஒவ்வொரு ஆண்டும் மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலம் அம்மாபேட்டை மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வரும் சாந்திக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.

Related image

காவல் ஆய்வாளர் சாந்தி 2013ஆம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை ஜூன் மாதம் வரை சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அப்பொழுது பதிவு செய்யப்பட்ட ஏழு போஸ்கோ வழக்கு உள்ளிட்ட 10 வழக்குகளை சிறப்பாக புலனாய்வு செய்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுக் கொடுத்தார். இந்நிலையில் உள்துறை அமைச்சகத்தின் இவ்விருதுக்கு அவர் தேர்வாகியுள்ளார்.