ஜார்கண்ட் மாநிலம் லடேகர் அருகே உள்ள சக்லா பஞ்சாயத்திற்கு உட்பட்ட துரிசோத் போன்ற 12 கிராமங்களில் உள்ள பசுக்கள், எருமை மாடுகளுக்கு வாரத்தில் ஒரு முறை விடுமுறை அளிக்கும் பழக்கம் நீண்ட வருடங்களாக இருந்து வருகிறது. தினம்தோறும் மாடுகளை வேலை வாங்குவதாலும் பால் கறப்பதாலும் அவை சோர்வடைந்து விடுகிறது. அதனால் வாரத்தில் ஒருமுறை அவற்றிற்கு விடுமுறை அளித்து வருவதாக கிராம மக்கள் கூறியுள்ளனர். இது குறித்து கிராமத்தை சேர்ந்த சஞ்சய் கஞ்சு என்பவர் கூறியதாவது, எங்கள் ஊரை சுற்றியுள்ள 12 கிராமங்களில் மாடுகளுக்கு ஒரு நாள் ஓய்வு அளிக்கும் பழக்கம் நூறாண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது.
அந்த வகையில் பழங்குடி இன மக்கள் மாடுகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அளிக்கின்றனர். அதேபோல் பழங்குடி இன அல்லாத மற்ற பிரிவினர் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்கின்றனர். இந்த பழக்கம் அருகே உள்ள கிராமங்களுக்கும் பரவியது. தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 24 மாநிலங்களில் மாடுகளுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளித்து ஓய்வு வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். மாநில கால்நடை பராமரிப்பு துறை அமைச்சகமும் இந்த தகவலை உறுதி செய்துள்ளது.