விமானம் தரையிறங்கும் போது தொழில்நுட்ப கோளாறு….. விமானியின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு…!!

""

மியான்மரில் 89 பேரை ஏற்றிச்சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ள நிலையில், விமானியின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மியான்மர் ஏர்லைன்சுக்குச் சொந்தமான யுபி-103 விமானத்தில்  7 பணியாளர்கள் உள்பட 89 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் அந்த நாட்டு சுற்றுலா நகரமான மாண்டலேவிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் காலை 9 மணிக்கு தரையிறங்க முயன்றது. அப்போது அந்த விமானத்தின் முன் பக்க சக்கரங்கள் விரிய மறுத்துள்ள நிலையில், உடனடியாக பின்பக்க சக்கரங்களை மட்டும் பயன்படுத்தி அந்த விமானத்தை விமானி சாதுரியமாக தரையிறக்கினார்.

Related image

இதனால் விமானத்தின் முன்பகுதி தரையில் உராய்ந்தவாறு அந்த விமானம் தரையிறங்கியது. அப்போது விமானத்தினுள் புகை கிளம்பியது இதைக்கண்டு பயணிகள் அனைவரும் பயத்தில் உறைந்தனர். ஆனால் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மியான்மரில் ஒரு வார கால இடைவெளியில் 2 முறை தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *