அவர் போட்ட பிச்சைதான் நான் இதுவரை நடிக்க காரணம்?…. டைரக்டர் பாரதிராஜா நெகிழ்ச்சி……!!!!

டைரக்டர் பாரதிராஜா இயக்கி நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகை ராதா, சத்யராஜ் தீபன் நடிப்பில் வெளியான படம் “முதல் மரியாதை”. இசைஞானி இளையராஜா இசையிலும் கவிஞர் வைரமுத்து வரிகளிலும் கடந்த 1985 ஆம் ஆண்டு இந்த படம் வெளியானது. இந்த படம் ரிலீஸ் ஆகி 38 வருடங்கள் நிறைவடைந்து இருக்கிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 67 திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் இந்த படம் தற்போது ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

இதை பார்க்க படத்தின் இயக்குனர் பாரதிராஜா சென்னையில் உள்ள தனியார் திரையரங்கிற்கு சென்றார். படத்தை பார்ப்பதற்கு முன்னதாக பாரதிராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, சினிமாவில் நுழைந்தவர்கள் அனைவரும் வெற்றி பெற்றுவிட முடியாது. சிவாஜி கணேசன் மட்டும் இல்லையெனில் நான் இல்லை. அவர் போட்ட பிச்சைதான் இதுவரையிலும் நான் நடிக்க காரணம். இதுபோன்ற ஒரு படைப்பை நானே நினைத்தாலும் மறுபடியும் எடுக்க முடியாது என்று அவர் கூறினார்.