தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தில் இருந்து ஆட்டோ சின்னம் வந்த விவரம் குறித்து காண்போம்…
1996 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸின் தேசிய தலைவர் டிவி நரசிம்மராவ் அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியிலிருந்து வெளியேறிய ஜி கே மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற புதிய கட்சியை உருவாக்கினார். பின்னர் திமுகவுடன் கூட்டணி அமைத்து தமாகா போட்டியிட்டது. அதில் 39 தொகுதிகளிலும் , 2001 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று 23 இடங்களிலும் தமாகா வென்றது. அதேபோல் மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி கண்டது இந்த தேர்தலில் போட்டியிட்டபோது சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.

பின்னர் 2001 இல் மூப்பனாரின் மறைவுக்குப் பின் அவரது மகன் ஜி கே வாசன் தாமாக_வை 2002ல் இந்திய தேசிய காங்கிரசுடன் இணைத்தார். மத்திய அமைச்சராக பதவி வகித்த நிலையில் 2014 காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை மீண்டும் தொடங்கினார். காங்கிரஸ்க்கு சென்ற எம்எல்ஏக்கள் எம்பிக்கள் மீண்டும் தன்னுடன் திரும்பி விட்டதால் சைக்கிள் சின்னத்தில் தங்களின் கட்சியின் நிரந்தரமாக வழங்க தேர்தல் ஆணையத்திடம் , நீதிமன்றத்திடமும் 2014ஆம் ஆண்டில் இருந்து போராடி வருகிறார்.
இதையடுத்து மக்களவைத் தேர்தலில் மட்டும் சைக்கிள் சின்னத்தை பயன்படுத்த தமாகாவிற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது.ஆனால் சைக்கிள் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தாமாக தலைவர் ஜி கே வாசன் வழக்கு தொடர்ந்தார். நிரந்தரமாகச் சினத்தை ஒதுக்க வேண்டும் என்பது விரிவான கோரிக்கை என்பதால் அதில் அவசரமாக முடிவெடுக்க முடியாது என கூறி ஜூன் முதல் வாரத்திற்கு வழக்கை ஒத்திவைத்தது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தஞ்சையில் தஞ்சை தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் நடராஜனுக்கு ஆட்டோ சினத்தைத் ஒதுக்கீடு செய்துள்ளது தேர்தல் ஆணையம்.