தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வைத்திருந்த ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள புளியரை சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக சென்ற ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து ஆட்டோ டிரைவர் கல்லிடைக்குறிச்சி பகுதியில் வசிக்கும் அழகேசன் என்பதும், தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக கொண்டு வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
அதன்பின் காவல்துறையினர் அழகேசனை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அழகேசனிடம் இருந்த 10 ஆயிரம் ரூபாய் பணம், 240 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.