வாகனங்களின் அலட்சியம்… கொஞ்சம் பார்த்து போக கூடாதா… முதியவருக்கு நேர்ந்த துயரம்…!!

ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் மீது ஆட்டோ மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் சுந்தர்ராஜ் நகரில் ராபர்ட் ஆம்புரோஸ் என்பவர் வசித்துவருகிறார்.இவர் திருச்சி அண்ணா ஸ்டேடியம் ரேஸ் கோர்ஸ் ரோடு பகுதியில் கடந்த 3 ஆம் தேதி நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்று எதிர்பாராதவிதமாக ராபர்ட் மீது மோதி விட்டது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீது அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.