ஆஸ்திரேலிய அணி 272 ரன் குவித்துள்ளது….!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 5-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில்  272  ரன்கள் குவித்துள்ளது.  

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான   5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் உள்ள பெரோசா கோட்லா மைதானத்தில்நடைபெற்று வருகின்றது.  டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து  ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ஆரோன் பிஞ்சும், உஸ்மான் க்வாஜாவும் களமிறங்கினர்.

ஆரோன் பின்ச் 27 ரன்னில் ஆட்டமிழக்க ஹேண்ட்ஸ் கோம்ப்பும், உஸ்மான் க்வாஜாவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி க்வாஜா 100 ரன்களும் , ஹேண்ட்ஸ் கோம்ப் 52 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது.இந்திய அணி தரப்பில் புவனேஷ்குமார் அதிகபட்சமாக 3 விக்கெட்டும் , ஷமி அஹமத் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *