BREAKING : மிரட்டிய ஆஸி…. அடங்கிய இந்தியா…. 85 ரன்னில் படு தோல்வி….!!

மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா – இந்தியா மோதியது. டாஸ் வென்ற ஆஸி அணி முதலில் பேட் செய்தது. தொடக்க ஜோடியாக களமிறங்கிய ஹீலி – மோனி ஆகியோரின் அதிரடியால் ஆஸ்திரேலியா அணியின் ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது .தொடக்க முதலே சிக்ஸர் , பவுண்டரி என பறக்க விட்ட இந்த ஜோடியால் அந்த அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன் குவித்து.

 

ஹீலி 39 பந்துகளில் 7 பவுண்டரி , 5 சிக்சருடன் 75 ரன் அடித்து ஆட்டமிழக்க, மோனி 54 பந்தில் 10 பவுண்டரி அடித்து 78* ரன்னுடன் இறுதி வரை களத்தில் நின்றார். இந்திய அணி சார்பில் தீப்தி சர்மா 2 விக்கெட்டும் , பூனம் யாதவ் , ராதா யாதவ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 185 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்த அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது.

 

மேகன் சுட் வீசிய முதல் ஓவரின் 3ஆவது பந்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷபாலி வர்மா ஆட்டமிழந்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தார். பின்னர் களமிறங்கிய தனியா பாட்டியா தலையில் பந்து பட்டு வெளியேற ஜெமிமாஹ் டக் அவுட்டில் வெளியேறினார். ஆஸ்திரேலிய அணியினரின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டை பறி கொடுத்தது.

மந்தனா 11 ரன்னிலும்,  இந்திய அணி கேப்டன் கவுர் 4 ரன்னில் ஆட்டமிழக்க இந்திய அணி 30 முன்னணி வீரர்களை இழந்து திணறியது. பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய வேதா கிர்ஷ்ணமுர்த்தி 19 ரன்னிலும் , தீப்தி சர்மா 39 ரன்னிலும் ஆட்டமிழக்க இந்திய அணியின் தோல்வி உறுதியாகியது. ஆஸ்திரேலிய அணியினரின் மிரட்டலான பந்து வீச்சால் இந்திய அணி 19.1 ஓவர்களில் 99 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 85 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

ஆஸ்திரேலியா அணி சார்பில்  சுட் 4 விக்கெட்டும்  , ஜெஸ் ஜோனஸ்ஸன் 3 விக்கெட்டும் , மொலினீஸ், கிம்மின்ஸ் , கேர்ரி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 5ஆவது முறையாக டி 20 உலக கோப்பையை பெற்று உலக சாம்பியன் ஆனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *