AUS VS SL : 5-வது டி20 போட்டியில் …. இலங்கை அணி ஆறுதல் வெற்றி ….!!!

ஆஸ்திரேலியா -இலங்கை அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்து முடித்த 4-டி20 போட்டியிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை வென்றது.இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான 5-வது டி20 போட்டி மெல்போர்னில் நேற்று நடைபெற்றது .இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இதைத்தொடர்ந்து முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது.இதில் அதிகபட்சமாக மேத்யூ வேட் 43 ரன்கள் எடுத்தார் . இதையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது . இறுதியாக 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது .இதன் மூலம்  இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *