காப்பான் திரைப்படம் இறுதி கட்டத்தை எட்டி அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தத் திரைப்படத்தை திரைப்படக் குழுவினர் வெளியிட உள்ளனர்.

சூர்யாவின் என் ஜி கே திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது காப்பான் திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது இந்த திரைப்படத்தின் இறுதிக்காட்சி ஆனது அசத்தலான சண்டைக் காட்சியுடன் வடிவமைக்கப்பட உள்ளது இந்த அசத்தலான சண்டை காட்சியில் சிறப்பான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார் நடிகர் சூர்யா என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதனைத் தொடர்ந்து இந்த சண்டைக் காட்சி முடிந்ததும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த திரைப்படத்தை படக்குழுவினர் வெளியிட உள்ளனர் இந்த திரைப்படத்தின் இயக்குனர் கே வி ஆனந்த் ஆவார் ஆவார் ஏற்கனவே சூர்யாவுடன் இணைந்து அயன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் அந்த அயன் திரைப்படத்திலும் இதுபோன்ற பல அசத்தலான சண்டை காட்சிகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன அதில் நடிகர் சூர்யா மிகுந்த ஆர்வத்தோடும் ஒரு சில அபாயகரமான காட்சிகளை அசால்ட்டாக நடித்து கொடுத்து சென்றிருக்கிறார் .
காப்பான் திரைப்படத்தில் அதைவிட பல மடங்கு ஆக்ஷன் கொண்ட ஒரு கமர்ஷியலான சண்டைக்காட்சி திரைப்படத்தின் இறுதிக்காட்சி ஆக வடிவமைக்கப்பட்டு வருகிறது இதில் சூர்யா தனது முழு முயற்ச்சியையும் போட்டு நடித்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன மோகன்லால் மற்றும் ஆர்யா ஆகியோர் நடித்து வருகின்றனர் மோகன்லால் மற்றும் ஆர்யாவுக்கு செக்யூரிட்டி கார்ட் ஆக நடிகர் சூர்யா அவர்கள் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி வெளியாக உள்ள இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவிலான வரவேற்புகள் உள்ளன.