வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 26…!!

இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 26

கிரிகோரியன் ஆண்டு : 238_ஆம் நாளாகும்.

நெட்டாண்டு : 239_ஆம் நாள்

ஆண்டு முடிவிற்கு  : 127 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்:

683 – உமையா கலீபு முதலாம் யசீதின் இராணுவத்தினர் மதீனாவில் 11,000 பேரைக் கொன்றனர்.

1071 – செல்யூக்குகள் பைசாந்திய இராணுவத்தை மான்சிக்கெர்ட் போரில் தோற்கடித்தனர். இவர்கள் விரைவில் அனத்தோலியாவின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றினர்.

1303 – தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சி சித்தோர்காரைக் கைப்பற்றினான்.

1542 – பிரான்சிசுக்கோ டி ஒரிலானா அமேசா ஆற்றின் வழியே சென்று அத்திலாந்திக் பெருங்கடலை அடைந்தார்.

1748 – அமெரிக்காவின் முதலாவது லூதரனியத் திருச்சபை பிலடெல்பியாவில் நிறுவப்பட்டது.

1768 – ஜேம்ஸ் குக் தனது முதலாவது கடற்பயணத்தை இங்கிலாந்தில் இருந்து என்டெவர் கப்பலில் ஆரம்பித்தார்.

1789 – பிரெஞ்சுப் புரட்சி: மனிதர்களின் மற்றும் குடிமக்களின் உரிமைகள் சாற்றுரை பிரெஞ்சு நாடாளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1791 – நீராவிக் கப்பலுக்கான அமெரிக்கக் காப்புரிமத்தை ஜோன் பிட்ச் பெற்றுக் கொண்டார்.

1795 – திருகோணமலை, பிரெடரிக் கோட்டையை ஸ்டுவேர்ட் தலைமையிலான பிரித்தானியப் படையினர் ஒல்லாந்தரிடம் இருந்து மீளக் கைப்பற்றினர்.

1814 – சிலி விடுதலைப் போர்: சிலியில் கிளர்ச்சியாளர்களுக்கிடையே சண்டை மூண்டது.

1883 – இந்தோனேசியாவின் கிரக்கத்தோவா எரிமலைத் தீவு கடைசித் தடவையாக வெடிக்க ஆரம்பித்தது.

1914 – முதலாம் உலகப் போர்: 20-நாள் முற்றுகையை அடுத்து, செருமானியக் குடியேற்ற நாடான டோகோலாந்து பிரெஞ்சு, பிரித்தானியப் படைகளிடம் சரணடைந்தது.

1920 – ஐக்கிய அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கும் அரசியலமைப்பின் 19-வது திருத்தச்சட்டமூலம் அமுலுக்கு வந்தது.

1922 – கிரேக்க-துருக்கியப் போர் (1919–22): துருக்கிய இராணுவத்தினரின் பெரும் தாக்குதல்களில் கிரேக்கத்தின் முக்கிய பாதுகாப்பு அரண்கள் தகர்க்கப்பட்டன.

1942 – உக்ரைனில் சோட்கிவ் என்ற இடத்தில் நாட்சி ஜெர்மனியர் காலை 2.30 மணிக்கு யூதர்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியகற்றி குழந்தைகள், நோயாளிகள் உட்பட 500 பேரை கொன்று குவித்தனர். இப்படுகொலைகள் இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்தன.

1944 – இரண்டாம் உலகப் போர்: சார்லஸ் டி கோல் பாரிசினுள் நுழைந்தார்.

1966 – தென்னாப்பிரிக்காவில் எல்லைப் போர் ஆரம்பமானது.

1970 – ஐக்கிய அமெரிக்காவில் புதிய பெண்ணிய இயக்கம் பெண்களுக்கான சமத்துவத்தை வலியுறுத்தி பணி நிறுத்தங்களில் ஈடுபட்டது.

1972 – 22வது ஒலிம்பிக் போட்டிகள் செருமனி, மியூனிக்கில் ஆரம்பமானது.

1977 – பிரெஞ்சு மொழி உரிமை ஆவணம் கியூபெக் சட்டமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

1978 – அல்பீனோ லூசியானி முதலாவது அருளப்பர் சின்னப்பர் என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1978 – முதலாவது செருமனிய விண்வெளி வீரர் சோயூஸ் விண்கலத்தில் விண்ணுக்குப் பயணமானார்.

1993 – யாழ்ப்பாணம், கிளாலியில் இரண்டு இலங்கைக் கடற்படைப் படகுகள் கடற்கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது.

1997 – அல்சீரியாவில் 60-இற்கு மேற்பட்டோர் பென் அலி என்ற இடத்தில் படுகொலை செய்யப்பட்டனர்.

1999 – உருசியக் குடியரசான தாகெஸ்தானை இசுலாமியத் தீவிரவாதிகள் ஊடுருவியதற்குப் பதிலடியாக, உருசியா இரண்டாவது செச்சினியப் போரை ஆரம்பித்தது.

2006 – திருகோணமலை மூதூர் கிழக்கில் இலங்கை விமானப்படைப் போர் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டனர்.

இன்றைய தின பிறப்புகள் : 

1728 – லாம்பர்ட், சுவிட்சர்லாந்து கணிதவியலாளர், இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1777)

1743 – அந்துவான் இலவாசியே, பிரான்சிய வேதியியலாளர், உயிரியலாளர் (இ. 1794)

1880 – கியோம் அப்போலினேர், இத்தாலிய-பிரான்சிய எழுத்தாளர் (இ. 1918)

1882 – ஜேம்ஸ் பிராங்க், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1964)

1883 – திரு. வி. கலியாணசுந்தரனார். தமிழறிஞர் (இ. 1953)

1910 – அன்னை தெரேசா, நோபல் பரிசு பெற்ற மக்கெடோனிய-இந்திய அருட்சகோதரி (இ. 1997)

1918 – காத்தரைன் ஜான்சன், அமெரிக்க இயற்பியலாளர், கணிதவியலாளர்

1927 – அ. அமிர்தலிங்கம், ஈழத்து அரசியல்வாதி (இ. 1989)

1933 – வி. தெட்சணாமூர்த்தி, ஈழத்து தவில் கலைஞர் (இ. 1978)

1934 – அ. ஜெ. கனகரத்னா, ஈழத்து இலக்கியவாதி (இ. 2006)

1950 – பொன். சிவகுமாரன், ஈழ விடுதலைப் போராட்டத்தில் நஞ்சு அருந்தி உயிர் நீத்த முதலாவது போராளி (இ. 1974)

1954 – ராஜ்கிரண், இந்தியத் திரைப்பட இயக்குனர், நடிகர்

1956 – மேனகா காந்தி, இந்திய அரசியல்வாதி

1964 – சுரேஷ், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்.

1971 – தாலீயா, மெக்சிக்கோ-அமெரிக்கப் பாடகி, நடிகை

1980 – கிறிஸ் பைன், அமெரிக்க நடிகர்

இன்றைய தின இறப்புகள் : 

1723 – ஆன்டன் வான் லீவன்ஹூக், டச்சு உயிரியலாளர் (பி. 1632)

1865 – யோகான் பிரான்சு என்கே, செருமானிய வானியலாளர் (பி. 1791)

1910 – வில்லியம் ஜேம்ஸ், அமெரிக்க மெய்யியலாளர், உளவியலாளர் (பி. 1842)

1918 – கியோம் அப்போலினேர், பிரெஞ்சு எழுத்தாளர் (பி. 1880)

1923 – எர்த்தா அயர்டன், பிரித்தானிய, பொறியியலாளர், கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1854)

1951 – அபலா போஸ், வங்காள சமூக சேவகர் (பி. 1864)

1969 – எஸ். எஸ். வாசன், தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் (பி. 1904)

2012 – த. சரவணத் தமிழன், தனித்தமிழ் அறிஞர், நூலாசிரியர்

2014 – மா. ரா., எழுத்தாளர், தமிழ்த் திரைப்பட கதை வசனகர்த்தா

 

இன்றைய தின சிறப்புநாள் : 

பெண்கள் சமத்துவ நாள் (ஐக்கிய அமெரிக்கா)