வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 25…!!

இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 25

கிரிகோரியன் ஆண்டு : 237_ஆம் நாளாகும்.

நெட்டாண்டு : 238_ஆம் நாள்

ஆண்டு முடிவிற்கு  : 128 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்:

766 – பைசாந்தியப் பேரரசர் ஐந்தாம் கான்ஸ்டன்டைன் தனக்கு எதிராக சதியில் ஈடுபட்ட 19 உயர் அதிகாரிகளைத் தூக்கிலிட்டார்.

1270 – பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் எட்டாவது சிலுவைப் போரில் இருந்த போது தூனிசில் இறந்தார்.

1580 – அல்காண்டரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் எசுப்பானியா போர்த்துக்கலை வென்றது.

1609 – இத்தாலிய வானியலாளர் கலிலியோ கலிலி தனது முதலாவது தொலைநோக்கியை வெனிசில் அறிமுகப்படுத்தினார்.

1630 – இலங்கையில் ரந்தெனிவலைச் சண்டையில் போர்த்துக்கீசப் படையினர் கண்டி இராச்சியப் படையினரால் தோற்கடிக்கப்பட்டனர்.

1732 – யாழ்ப்பாணத்தின் இடச்சுத் தளபதியாக கோல்ட்டெரசு வூல்ட்டெரசு நியமிக்கப்பட்டார்.

1758 – ஏழாண்டுப் போர்: புருசிய மன்னர் இரண்டாம் பிரெடெரிக் உருசிய இராணுவத்தை சோண்டோர்ஃப் என்ற இடத்தில் தோற்கடித்தார்.

1803 – யாழ்ப்பாணம் பனங்காமப் பற்று மன்னன் பண்டாரவன்னியன் கண்டியர்களின் உதவியுடன் முல்லைத்தீவைத் தாக்கிக் கைப்பற்றினான். விடத்தல் தீவைக் கைப்பற்ற எடுத்த முயற்சி மேஜர் வின்சென்ட் என்பவனால் முறியடிக்கப்பட்டது.[1]

1814 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: வாசிங்டன் எரியூட்டலின் இரண்டாம் நாளில் பிரித்தானியப் படையினர் அமெரிக்கக் காங்கிரசு நூலகம், அமெரிக்கத் திறைசேரி மற்றும் பல அரச கட்டடங்களுக்குத் தீ வைத்தனர்.

1823 – அமெரிக்க தேடலியலாளர், விலங்கின் மென்மயிர் வணிகர் இயூ கிளாசு தெற்கு டகோட்டாவில் தேடலுக்குச் சென்ற போது கொடுங்கரடியினால் தாக்கப்பட்டார்.

1825 – உருகுவே நாடு பிரேசிலிடமிருந்து விடுதலையை அறிவித்தது.

1830 – பெல்ஜிய புரட்சி ஆரம்பமானது.

1875 – ஆங்கிலேயக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் மனிதர் என்ற சாதனையை மெத்தியூ வெப் பெற்றார்.

1894 – அரையாப்பு நோய்க்கான தொற்றுக் கிருமியை கிடசாடோ சிபாசாபுரோ கண்டுபிடித்தார்.

1898 – கிரேக்கத்தில் துருக்கியக் கும்பலால் 700 பொது மக்கள், 17 பிரித்தானியக் காவலர்கள், கிரீட் நகர பிரித்தானியத் தூதர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

1914 – முதலாம் உலகப் போர்: சப்பான் ஆத்திரியா-அங்கேரி மீது போர் தொடுத்தது.

1914 – முதலாம் உலகப் போர்: பெல்சியத்தில் உள்ள லியூவென் கத்தோலிக்கப் பலகலைக்கழக நூலகம் செருமனிய இராணுவத்தால் சேதமாக்கப்பட்டதில், ஆயிரகக்ணக்கான நூல்கள், வரலாற்று ஆவணங்கள் அழிக்கப்பட்டன.

1920 – போலந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் ஆகத்து 13 இல் ஆரம்பித்த போர் செஞ்சேனையினரின் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது.

1933 – சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இடம்பெற்ற பெரும் நிலநடுக்கத்தில் 9,000 பேர் உயிரிழந்தனர்.

1939 – ஐக்கிய இராச்சியமும் போலந்தும் இராணுவ உடன்படிக்கையை ஏற்படுத்தின.

1940 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் முதல் தடவையாக பெர்லின் மீது குண்டுகளை வீசியது.

1944 – இரண்டாம் உலகப் போர்: கூட்டுப் படைகளால் பாரிசு விடுவிக்கப்பட்டது.

1945 – இரண்டாம் உலகப் போர்: சப்பான் சரணடைந்து பத்து நாட்கள் கடந்த நிலையில், சீனப் பொதுவுடமைக் கட்சியின்ஆதரவாளர்கள் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் இருவரைக் கொன்றனர். இதுவே பனிப்போரின் முதலாவது கொலைகள் எனக் கருதப்படுகிறது.

1950 – வேலைநிறுத்தத்தைத் தடுக்கும் பொருட்டு அமெரிக்க அரசுத்தலைவர் ஹாரி எஸ். ட்ரூமன் நாட்டின் சாலைகளை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உத்தரவிட்டார்.

1955 – கடைசி சோவியத் படைகள் ஆஸ்திரியாவை விட்டு வெளியேறின.

1961 – எட்டு மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்த யானியோ குவாத்ரோசு பிரேசிலின் அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

1967 – அமெரிக்க நாட்சிக் கட்சியின் நிறுவனர் ஜார்ஜ் ரொக்வெல் அவரது குழுவின் முன்னாள் ஒறுப்பினர் ஒருவனால் கொல்லப்பட்டார்.

1980 – சிம்பாப்வே ஐக்கிய நாடுகள் அவை.யில் இணைந்தது.

1981 – வொயேஜர் 2 விண்கலம் சனிக்கு மிகக்கிட்டவாகச் சென்றது.

1989 – வொயேஜர் 2 விண்கலம் நெப்டியூனுக்குக்க் கிட்டவாகச் சென்றது.

1991 – லினசு டோர்வால்டுசு லினக்சு இயக்குதளத்தை அறிமுகப்படுத்தினார்.

1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து பெலருஸ் பிரிந்தது.

2001 – பகாமாசில் இடம்பெற்ற ஒரு விமான விபத்தில் அமெரிக்கப் பாடகி ஆலியாவும் அவரது குழுவினரும் கொல்லப்பட்டனர்.

2003 – மும்பையில் இரண்டு வாகனக் குண்டுவெடிப்புகளில் 52 பேர் கொல்லப்பட்டனர்.

2006 – உக்ரைனின் முன்னாள் பிரதமர் பாவ்லோ லசரென்கோ ஊழல் குற்ரச்சாட்டுகளுக்காக 9 ஆண்டுகள் சிறைத்தண்டை பெற்றார்.

2007 – இந்தியா, ஐதராபாத் நகரில் இரண்டு வெவ்வேறு குண்டுவெடிப்பு நிகழ்வுகளில் 30 பேர் கொல்லப்பட்டு 50 பேருக்கு மேல் காயமடைந்தனர்.

2012 – வொயேஜர் 1 விண்கலம் விண்மீனிடைவெளிக்குச் சென்ற முதலாவது மனிதரால் உருவாக்கப்பட்ட விண்பொருள் என்ற சாதனையை நிலைநாட்டியது.

2017 – 2017 அரியானா கலவரம்: இந்தியாவில் அரியானா மாநிலத்தில் தொடங்கிய வன்முறைகள் பஞ்சாப், புதுதில்லிக்கும் பரவியதில், 36 பேர் உயிரிழந்தனர், 250 பேர் காயமடைந்தனர்.

இன்றைய தின பிறப்புகள் : 

1530 – நான்காம் இவான், உருசியப் பேரரசர் (இ. 1584)

1887 – செல்லப்பா குமாரசுவாமி, இலங்கை அரசியல்வாதி

1903 – அர்பத் எலோ, அங்கேரிய-அமெரிக்க சதுரங்க வீரர், எலோ தரவுகோள் முறையை அறிமுகப்படுத்தியவர் (இ. 1992)

1905 – மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா, போலந்து புனிதர் (இ. 1938)

1906 – கிருபானந்த வாரியார், சமயச் சொற்பொழிவாளர் (இ 1993)

1906 – கிட்டப்பா, நடிகர், பாடகர் (இ. 1933)

1911 – வோ இங்குயென் கியாப், வியட்நாமிய இராணுவத் தலைவர் (இ. 2013)

1929 – எஸ். வரலட்சுமி, தமிழ்த் திரைப்பட நடிகை, பாடகி

1930 – சான் கானரி, இசுக்கொட்டிய நடிகர்

1931 – எம். கே. அர்ஜுனன், கேரலத் திரைப்பட இசையமைப்பாளர்

1938 – பிரெட்ரிக் போர்சித், ஆங்கிலேய ஊடகவியலாளர், எழுத்தாளர்

1945 – ராம் புனியானி, இந்திய உயிரிமருத்துவர்

1952 – விஜயகாந்த், தமிழக நடிகர், அரசியல்வாதி

1952 – துலிப் மென்டிஸ், இலங்கைத் துடுப்பாளர்

1955 – ஹனி இரானி, இந்தியத் திரைப்பட நடிகை

1957 – எம். ஆர். கே. பன்னீர்செல்வம், தமிழக அரசியல்வாதி

1962 – தஸ்லிமா நசுரீன், வங்காள தேச எழுத்தாளர்

1964 – அஸ்மின் அலி, மலேசியக் கணிதவியலாளர், அரசியல்வாதி

1973 – நித்யஸ்ரீ மகாதேவன், கருநாடகப் பாடகி

1976 – ஜாவித் கதீர், பாக்கித்தானியத் துடுப்பாளர்

1987 – மோனிகா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இன்றைய தின இறப்புகள் : 

79 – மூத்த பிளினி, உரோமை இராணுவத் தலைவர், மெய்யியலாளர் (பி. 23)

1636 – பாய் குருதாஸ், பஞ்சாபிக் கவிஞர் (பி. 1551)

1776 – டேவிடு யூம், இசுக்கொட்டியப் பொருளியலாளர், மெய்யியலாளர் (பி. 1711)

1819 – ஜேம்ஸ் வாட், இசுக்கொட்டிய-ஆங்கிலேயப் பொறியியலாளர் (பி. 1736)

1822 – வில்லியம் எர்செல், செருமானிய-ஆங்கிலேய வானியலாளர் (பி. 1738)

1867 – மைக்கேல் பரடே, ஆங்கிலேய இயற்பியலாளர், வேதியியலாளர் (பி. 1791)

1900 – பிரீட்ரிக் நீட்சே, செருமானிய மெய்யியலாளர் (பி. 1844)

1908 – என்றி பெக்கெரல், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளர் (பி. 1852)

1919 – விக்தர் நோர், செருமானிய-உருசிய வானியலாளர் (பி. 1840)

1938 – அலெக்சாண்டர் குப்ரின், உருசிய நாடுகாண் பயணி (பி. 1870)

1971 – வ. சு. செங்கல்வராய பிள்ளை, தமிழறிஞர் (பி. 1883)

1981 – எஸ். ஏ. விக்கிரமசிங்க, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (பி. 1901)

2001 – ஆலியா, அமெரிக்கப் பாடகி, நடிகை (பி. 1979)

2001 – மட்கே ஜெர்ட்ரூடே ஆடம், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1912)

2008 – தா. இராமலிங்கம், ஈழத்துக் கவிஞர் (பி. 1933)

2009 – எட்வர்ட் கென்னடி, அமெரிக்க அரசியல்வாதி (பி. 1932)

2012 – நீல் ஆம்ஸ்ட்றோங், அமெரிக்க விண்வெளி வீரர் (பி. 1930)

2012 – வி. கே. லட்சுமணன், தமிழக அரசியல்வாதி (பி. 1932)

2018 – ஜான் மெக்கெய்ன், அமெரிக்க அரசியல்வாதி (பி. 1936)

 

இன்றைய தின சிறப்புநாள் : 

விடுதலை நாள் (உருகுவை, பிரேசிலிடம் இருந்து 1825)

விடுதலை நாள் (பிரான்சு)

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *