ஆகஸ்ட் 12 ”உலகம் இளைஞர்கள் தினம்” அனுசரிப்பு …!!

ஆகஸ்ட் 12_ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும்  இளைஞர்கள் தினமாக அனுசரிக்கப்படுகின்றது.

சர்வதேச இளைஞர்கள் தினம் 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை லிஸ்பன் நகரில் நடைபெற்ற உலக நாடுகளின் இளைஞர் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் மாநாட்டில் சர்வதேச ரீதியில் இளைஞர்களின் பிரச்சினையும்,  இளைஞர்களின் செயல்பாடுகளையும் கவனத்தை கொள்ளும் வகையில் இளைஞர்களுக்கான சர்வதேச தினம் ஒன்றை பிரகடனப்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்தது.

Image result for world youth day

இதன்படி 1999 டிசம்பர் 17 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச இளைஞர்கள் தினம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி கொண்டாடப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. எனவே இந்த தினம் 2000 ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.15 வயது முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் இளைஞர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது.உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு கனவு காணும் இளைஞர்கள் உள்ளதால் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இன்று இளைஞர்கள் தினம் கொண்டாடப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *