தண்டவாளத்தில் பிணமாக கிடந்த ஏட்டு… நடந்தது என்ன…? பெரும் பரபரப்பு…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காஞ்சிரங்கால் கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வந்தார். இவர் சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை போலீசில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சங்கரேஸ்வரி என்ற மனைவியும், லாவன் என்ற மகனும், தமிழினி என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை சிவகங்கை – தொண்டி ரோடு ரயில்வே மேம்பாலம் பகுதியில் தண்டவாளத்தில் பலத்த காயங்களுடன் சரவணன் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் சரவணன் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து ரயில் முன்பாக பாய்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லையெனில் தண்டவாளத்தை கடந்த போது ரயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனைக்கு பின் அவருடைய உறவினர்களிடம் சரவணன் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply