அட்டகத்தி தினேஷின் புதிய அவதாரம்…. வெளியான போஸ்டர்….!!

பிரபல நடிகர் அட்டக்கத்தி தினேஷ் இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.

தமிழ் சினிமாவில் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அட்டகத்தி. இப்படத்தில் ஹீரோவாக நடிகர் தினேஷ் நடித்திருந்தார். அதன்பின் தினேஷ் அட்டக்கத்தி தினேஷ் என்று அழைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து குக்கூ, விசாரணை, கபாலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள அட்டக்கத்தி தினேஷ் தற்போது இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.

அதன்படி அவர் “வயிறுடா” என்று பெயர் வைக்கப்பட்டுள்ள படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினேஷ்