மாவு பாக்கெட்டுக்காக சர்க்கார், 2.O பணியாற்றிய எழுத்தாளர் மீது தாக்குதல்…..!!

மாவு பாக்கெட் தகராறில் சர்க்கார், 2.O பணியாற்றிய எழுத்தாளர் மீது தாக்குதல் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவின் அருகே இருக்கும் பார்திவபுரம் பகுதியில் வசித்து வருபவர் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் . திரைக்கதை, வசனம் உள்ளிட்ட பல்வேறு முகங்களாக ஜொலிக்கும் இவர் பாபநாசம், நான் கடவுள், சர்க்கார், 2.O உள்ளிட்ட பல்வேறு தமிழ் மற்றும் படங்களில் பணியாற்றியுள்ளார்.இந்நிலையில் இவர் நேற்று தனது வீட்டருகே உள்ள மளிகைக் கடையில் தோசை மாவு வாங்கி சென்றுள்ளார். அதை வீட்டிற்கு சென்று பார்த்த மாவு கெட்டுப்போய் காலாவதியாகிவிட்டது  என்பதை அறிந்து கொண்ட ஜெயமோகன்  அதை திருப்ப கடையில் கொடுக்கச் சென்றார்.

மாவு பாக்கெட் தகராறு : பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்

அப்போது ஜெயமோகன் மாவு பாக்கெட்டை கடையில் இருந்தவர்களின் முகத்தில் வீசியதாக  கூறப்படுகின்றது. இதை தொடர்ந்து உருவான தகராறில் கடையில் இருந்த  பெண்மணி அவரை  திட்டியதாகவும், அப்பெண்ணின் கணவர் தாக்கியதோடு மட்டுமில்லாமல் குடித்துவிட்டு தன் வீட்டருகே வந்து கடைக்காரர் போதையில் தகாத வார்த்தையில் பேசியதாகவும் ஜெயமோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசில்  ஜெயமோகன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் மளிகைக் கடைக்காரர் செல்வத்தை  கைது செய்துள்ளனர். தற்போது எழுத்தாளர்  ஜெயமோகன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.