நிலம் தொடர்பாக முன்விரோதம்…. கல்லால் தாக்கிய வாலிபர்…. கைது செய்த காவல்துறை….!!

முன்விரோதம் காரணமாக கல்லால் தாக்கிய வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் சேகர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் கண்ணதாசன் என்பவரும் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று சேகர் வீட்டில் இருந்தபோது கண்ணதாசன், அவருடைய மனைவி ஹேமலதா, தம்பி காரியக்காரன், உறவினர் சின்னம்மாள் ஆகிய 4 பேரும் சேர்ந்துகொண்டு சேகரையும் அவரது குடும்பத்தினரையும் திட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சேகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கண்ணதாசன், ஹேமலதா, காரியக்காரன், சின்னமாள் ஆகிய 4 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காரியக்காரனை கைது செய்துள்ளனர். இந்தநிலையில் ஹேமலதா வீட்டு ஆடு ஓன்று சேகர் வீட்டு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. இதனை கண்டதும் சேகர் மகன் நந்தகுமார் அதனை விரட்டியுள்ளார்.

இதுகுறித்து ஹேமலதா கேட்டபோது அவரை நந்தகுமார் கற்களால் அடிக்க முயன்றுள்ளார். ஆனால் அந்தக் கல்லானது ஹேமலதாவின் மகளான சுஷ்மிதா மீது பட்டுள்ளது. இதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார். உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஹேமலதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நந்தகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *