மாற்றப்பட்ட ஏ.டி.எம்-கார்டு…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

வேறொரு நபரின் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாரண்டஅள்ளி பகுதியில் மக்புல் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள ஏ.டி.எம்- மையத்திற்கு பணம் எடுக்க சென்றுள்ளார். ஆனால் பாஷாவிற்கு ஏ.டி.எம்-மில் பணம் எடுக்க தெரியாததால் அங்கிருந்த வாலிபர் ஒருவரிடம் உதவி கேட்டுள்ளார். அதன்படி அந்த வாலிபர் ஏ.டி.எம் கார்டை வாங்கி எந்திரத்தில் சொருகி பார்த்துவிட்டு பணமில்லை என்று கூறி கார்டை பாஷாவிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து விரைவாக சென்றுள்ளார்.

அதன்பின் ஏ.டி.எம் கார்டை பார்த்த பாஷா அது மாற்றப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து பல்வேறு இடங்களில் அந்த வாலிபரை தேடிய போது அவர் மாரண்டஅள்ளியில் உள்ள வேறொரு ஏ.டி.எம்-மையத்தில் பணம் எடுக்க முயன்றுள்ளார். உடனடியாக அந்த வாலிபரை பாஷா மடக்கி பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அந்த வாலிபர் கொத்த கொண்ட பள்ளி நகரத்தில் வசிக்கும் மஞ்சுநாத் என்பது தெரியவந்துள்ளது. காவல்துறையினர் மஞ்சுநாத்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *