“என்னை சிறையில் அடையுங்கள்” 6 ஏ.டி.எம் எந்திரங்களை உடைத்த நபர் போலீஸில் சரண்…. திருவள்ளூரில் பரபரப்பு….!!!

6 ஏ.டி.எம் எந்திரங்களை உடைத்த ரியல் எஸ்டேட் தரகர் போலீசில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருநின்றவூர் சாலையில் அமைந்துள்ள வங்கி ஏ.டி.எம் எந்திரங்கள் உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்தப் பகுதியில் அமைந்துள்ள 3 ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, ஆக்சிஸ் வங்கி, யூனியன் வங்கி ஏ.டி.எம் என மொத்தம் 6 ஏ.டி.எம் எந்திரங்கள் உடைக்கப்பட்டிருந்தன.  இதுகுறித்து திருநின்றவூர் காவல் நிலையத்தில் மக்கள் புகார் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதி காவல்நிலையத்தில் ஒருவர் சரணடைந்தார். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் பிரகாஷ் நகர் 6-வது தெருவில் வசித்துவரும் சேஷாத்ரி என்பது தெரியவந்துள்ளது. மேலும் ரியல் எஸ்டேட் தரகராக வேலை பார்த்து வரும் இவரின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. இதனால் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சேஷாத்திரி ஏ.டி.எம் எந்திரத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கு பணம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் அனைத்து ஏ.டி.எம் இயந்திரங்களையும் சுத்தியலால் அடித்து நொறுக்கி காவல்நிலையத்தில் சரணடைந்து தன்னை சிறையில் அடைக்க வேண்டும் என  காவல்துறையினரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து சேஷாத்திரியை கைது செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *