டெல்லியின் வசிராபாத் நகரில் ஜகத்பூர் மேம்பாலம் அருகில் ஐசிஐசிஐ எனப்படும் தனியார் வங்கிக்கு சொந்தமான ATM மையமானது இருக்கிறது. இந்த ATM மையத்தில் பணம் நிரப்ப வங்கியிலிருந்து வேனில் நேற்று மாலை 5 மணி அளவில் பணம் கொண்டுவரப்பட்டது. அப்போது வேனில் பாதுகாப்பிற்காக காவலாளி மற்றும் ஊழியர்கள் இருந்தனர்.

இந்நிலையில் அங்கு பைக்கில் வந்த நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் ATM வேன் காவலாளியை சுட்டார். இதனால் காவலாளி ரத்தவெள்ளத்தில் சரிந்து விழ, ATM மையத்தில் நிரப்ப வேனில் வைத்திருந்த ரூ.8 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு அந்நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். அதன்பின் துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்த காவலாளியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

எனினும் காவலாளியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், காவலாளியை சுட்டுக் கொன்று பணத்தை கொள்ளையடுத்து சென்ற கொள்ளையனை வலைவீசி தேடி வருகின்றனர்.