அதுபற்றி மட்டும் சொல்லிடாதீங்கன்னு லோகேஷ் சொன்னார்?…. கௌதம் வாசுதேவ் மேனன் கலகல பேச்சு….!!!!

லோகேஷ் கனகராஜ் டைரக்டில் விஜய் நடிப்பில் உருவாகும் படம் “லியோ”. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்க உள்ளார். இதில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், நடிகர் பாபு ஆண்டனி உட்பட பலர் நடிக்கின்றனர். லியோ படத்தின் முதற்கட்ட சூட்டிங் காஷ்மீரில் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் லியோ திரைப்படம் தொடர்பாக கௌதம் வாசுதேவ் மேனன் சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், என் நண்பர் லோகேஷ் கனகராஜ் மிகவும் கண்டிப்புமிக்கவராவார். அவர் தன்னிடம் “சார் இப்படத்தின் அப்டேட் குறித்து கேட்பார்கள். ஆனால் படத்தை பற்றி எதையும் சொல்லிடாதீங்க. ஒருவேளை அவர்கள் கட்டாயப்படுத்தி கேட்டால், படப்பிடிப்பு மிகவும் நன்றாக இருந்தது என மட்டும் சொல்லுங்கள் என லோகேஷ் என்னிடம் கூறினார். உண்மையிலேயே படப்பிடிப்பு நன்றாகவே இருந்தது என்று கௌதம் வாசுதேவ் மேனன் கலகலப்பாக கூறினார்.