“அதிமுகவை நிராகரிப்போம்”… திமுக அறிவிப்பு… கிராம சபை கூட்டம் தொடக்கம்…!!!

திமுக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிராமசபை கூட்டங்கள் இன்று நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அதில் திமுக தலைவர் கிராமசபை கூட்டங்கள் நடத்த அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் இன்று தமிழகத்தில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் வார்டுகளில் “அதிமுகவை நிராகரிக்கிறோம்”எனும் பெயரில் கிராம சட்டசபை கூட்டம் திமுக சார்பில் நடந்து வருகிறது. ஸ்ரீபெரம்பத்தூர் அருகிலுள்ள குன்னம் எனும் கிராமத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

அதைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றியம் மேல்பட்டி கிராமத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், திருவள்ளூர் மாவட்டம் நடுக்குத்தகை பகுதியில் பொருளாளர் டி.ஆர்.பாலு, திருச்சி மாவட்டம் பெருவிளநல்லூரில் கே.என்.நேரு, விழுப்புரம் திருவெண்ணை நல்லூரில் துணைப் பொதுச்செயளாலர் க.பொன்முடி, சென்னை ராயபுரத்தில் ஆ.ராசா, திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றியம் வட சின்னார்பாளையம் கிராமத்தில் அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்றனர்.