“இயற்கை இடர்பாடுகள்” செய்து காண்பித்த பணியாளர்கள்…. கலெக்டர் செய்த செயல்….!!

இயற்கை இடர்பாடுகளால் பாதிப்படைந்தவர்களை மீட்கும் பணி தொடர்பாக மாதிரி ஒத்திகை பயிற்சியானது கலெக்டர் முன்னிலையில் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேரிடர் மேலாண்மை, பேரிடர் தணிக்கும் துறை, தீயணைப்பு மீட்பு பணிகள் துறை போன்றவை சார்பாக சர்வதேச பேரிடர் துயர் துடைப்பு நாளை முன்னிட்டு இயற்கை இடர்பாடுகளால் பாதிப்படைந்தவர்களை மீட்கும் பணி மற்றும் விழிப்புணர்வு குறித்து பணியாளர்கள் மாதிரி ஒத்திகை பயிற்சி செயல்விளக்கத்தை செய்து காண்பித்தனர். அதற்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலை வகித்தார். இதனையடுத்து புயல், மழை வெள்ளத்தினால் பாதிப்படைந்து அடித்து செல்பவர்களை படகு மூலம் மீட்பதும், அடுக்குமாடி வீடுகளில் தீ விபத்து ஏற்படும்போது அதை எவ்வாறு உடனுக்குடன் அணைக்க வேண்டும் என்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை பணியாளர்கள் செய்து காண்பித்தனர்.

அதன்பின் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை அடுக்குமாடியில் இருந்து காப்பாற்றுவது தொடர்பாக செயல் விளக்கத்தினை தீயணைப்பு பணியாளர்கள் செய்து காண்பித்தனர். இதனைதொடர்ந்து வெள்ள அபாய காலங்களில் பயன்படுத்தக்கூடிய உபகரணங்களை கொண்டு எவ்வாறு பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை பற்றியும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த தீ விபத்து காலத்தில் புகையை வெளியேற்றும் கருவி மற்றும் அதை சூழ்ந்த பகுதியில் மூச்சுக்கருவி, தீயணைப்பு கருவிகள் கொண்டு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்பின் மின்னல் தாக்கும்போது பச்சை மரங்கள் மின்சாரத்தை எளிதில் கடந்து செல்வதால் மழைக்காலத்தில் அதற்கு கீழ் பொதுமக்கள் நிற்பதை தவிர்க்க வேண்டும்.

மேலும் இடி தாக்கும் போது பொதுமக்கள் காதுகளை கைகளால் பொத்தியும், பாழடைந்த கட்டிடங்களின் கீழ் நிற்பதையும் தவிர்க்கவேண்டும். அதுமட்டுமின்றி பொதுமக்கள் இந்த பேரிடர் காலத்தில் தங்களையும் தங்கள் உடமைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து கலெக்டர் வெள்ளம் தொடர்பான பாதுகாப்பு மற்றும் தயார் நிலை வழிகாட்டி கையேட்டினை பணியாளர்களுக்கு வழங்கினார். அப்போது ஈரோடு மாவட்ட தீயணைப்பு அதிகாரி புளுகாண்டி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலாஜி, தாசில்தார் பாலசுப்பிரமணி மற்றும் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *