அடேங்கப்பா.! ரூ 1,374,00,00,000 பறிமுதல்…… தேர்தல் ஆணையம் அதிரடி…!!

இந்தியா முழுவதும் முறையான ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.1,374 மதிப்பிலான பொருட்கள் , பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 7 கட்டமாக நடக்கும் மக்களவை தேர்தல் வரும் 11_ஆம் தேதி தொடங்குகிறது . தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்த நாள் தொடங்கி தேர்தல் பறக்கும் படையினர் நாடு முழுவதும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர் . உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பணம் மற்றும் பொருட்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர்.

தொடர்புடைய படம்

 இந்நிலையில் இதுவரை தேர்தல் நடத்தை விதிகளின் அடிப்படையில் முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் குறித்த மதிப்பிடுகளை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில்  நாடு முழுவதும் இதுவரை சுமார் ரூ.1,374 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் , தமிழகத்தில் நடந்த பறக்கும்படை சோதனையில் ரூ.185.38 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.