வெளுத்து வாங்கிய ஜானி பேர்ஸ்டோ, டேவிட் வார்னர்……. பெங்களூரு அணிக்கு மிகப்பெரிய இலக்கு….!!

ஜானி பேர்ஸ்டோ, டேவிட் வார்னர் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து சன்ரைசர்ஸ் அணி 231 ரன்கள் குவித்துள்ளது. 

ஐபிஎல் 11-ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ்      பெங்களூரு  அணிகளுக்கிடேயேயான  போட்டி   ஹைதெராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களான டேவிட் வார்னரும், பேர்ஸ்டோவும் களமிறங்கினர்.

இருவரும் தொடக்க முதலே அதிரடியாக விளையாடி பெங்களூரு அணியின் பந்து வீச்சை நொறுக்கி தள்ளினர். குறிப்பாக பேர்ஸ்டோ அனைத்து பவுலர்களையும் விளாசி தள்ளினார். ருத்ர தாண்டவம் ஆடிய  பேர்ஸ்டோ 14 வது ஓவரில் சதம் விளாசி ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோ 56 பந்துகளில் 114 ரன்கள் (7 சிக்ஸர், 12 பவுண்டரி) விளாசினார். இதையடுத்து விஜய் சங்கர் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்..

இறுதியில்  வார்னரும் அதிரடியில் இறங்கி அவரும் தனது சதத்தை பதிவு செய்தார்..வார்னர் 55 பந்துகளில் 100* ரன்கள் (5 சிக்ஸர், 5 பவுண்டரி) விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். யூசுப் பதான் 6* ரன்னிலும் ஆட்டமிழக்காமல்  களத்தில் இருந்தார்.  இறுதியில் 20 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 231 ரன்கள் குவித்தது. இதையடுத்து பெங்களூரு அணி இலக்கை நோக்கி பார்த்திவ் பட்டேலும், ஹெட் மேயரும் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.