“தப்பியது அதிமுக, குறைந்தது திமுக” நிம்மதியில் EPS ,OPS …!!

விக்கிரவாண்டி MLA  ராதாமணி மரணத்தையடுத்து சட்டசபையில் திமுக பலம் மீண்டும் குறைந்துள்ளது.

நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றிபெற்ற திமுக கூட்டணி 13 சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் 97_ஆக இருந்த தன்னுடைய பலத்தை 110_ஆக அதிகரித்தது. இந்நிலையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
Image result for திமுக அதிமுக சட்டசபை

இதனால் திமுக கூட்டணியின்  பலம் தமிழக சட்டசபையில் திமுக 102 + காங்கிரஸ் 7 என 109_ஆக குறைந்து. இந்நிலையில் இன்று உடல்நலக் குறைவின் காரணமாக விக்கிரவாண்டி  சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  கு. ராதாமணி உயிரிழந்தார். திமுக சட்டமன்ற உறுப்பினரான இவரின் மரணத்தால் திமுகவின் பலம் தற்போது 101_ஆக குறைந்துள்ளது. இதனால் திமுகவினர் செய்வதறியாது இருந்து வருகின்றனர்.

Image result for திமுக அதிமுக

நடைபெற இருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது எப்படியாவது அதிருப்தி அதிமுகவினர் ஆதரவோடு வெற்றி பெற்று விடலாம் என்று காய் நகர்த்தி வந்த திமுகவிற்கு இந்த எண்ணிக்கை குறைவு மேலும் சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே TTV தினகரன் , அவரின் ஆதரவாளர்கள் 3 MLA_க்கள் , கருணாஸ் , தமீம் அன்சாரி மற்றும் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் சிலரை வைத்து இந்த ஆட்சியை கலைக்கும் சூழல் இருப்பது குறிப்பிடத்தக்கது.