விவசாய தொழிலாளர்களையும் “ரூ.6000 உதவித்தொகை” திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தல்- ஓபிஎஸ் பேட்டி..!!

நிதியமைச்சர்கள் கூட்டத்தில், விவசாய தொழிலாளர்களையும் ரூ.6000 உதவித்தொகை திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தியுள்ளோம் என  ஓபிஎஸ் பேட்டியளித்துள்ளார்.  

பாரதிய ஜனதா இரண்டாவது முறையாக பொறுப்பெற்ற பின் தனது நிதி நிலையறிக்கையை வரும் ஜூலை 5-ம் தேதி தாக்கல் செய்கிறது. நிர்மலா சீதாராமன் வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்வது குறித்து பல்வேறு அமைச்சக செயலாளர்களிடம் ஆலோசனை நடத்தி நிதி நிலையறிக்கையை தயார் செய்து வருகிறார். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை  தாக்கல் செய்வதற்கு முன்னதாக மாநில நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி அவர்களின் கருத்துகளை கேட்பது வழக்கம்.

Image result for நிர்மலா சீதாராமன்

அதன் படி டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநில அரசுகளின் கருத்தை கேட்டறிந்தார். பின்னர் ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தது.

Related image

கூட்டம் முடிவடைந்த பின்னர் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,”நிதியமைச்சர்கள் கூட்டத்தில் தமிழகத்தின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை முன்வைத்துள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் தண்ணீர் பிரச்னையை எதிர்கொள்ள ரூ.1000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளோம். சென்னை மெட்ரோரயில் திட்டத்தை விரிவுபடுத்த தேவையான நிதி ஒதுக்க வலியுறுத்தியுள்ளோம். விவசாய தொழிலாளர்களையும் ரூ.6000 உதவித்தொகை திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தியுள்ளோம்” என்று அவர் கூறினார்.