விருச்சிகம் ராசிக்கு…! அனுகூலம் உண்டாகும்..! தாமதம் ஏற்படும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று மனதில் இனம் புரியாத சஞ்சலங்கள் ஏற்படும்.

தொழில் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். காரியத்தில் அனுகூலம் உண்டாகும். கடன்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் கவனமாக இருங்கள். வரவுக்கேற்ற செலவுகள் வந்துச்சேரும். பெரிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பணவிஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். பணப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம். உணவுகளை சரியான நேரத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

மற்றவர்களிடம் உரையாடும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். காதலில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக வைத்துவிட்டு மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள், இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் இளமஞ்சள் நிறம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *