மீனம் ராசிக்கு…! முயற்சிகள் தேவை..! நல்லது நடக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே…!
இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாளாகவே இருக்கும்.

இன்று உங்களுக்கு முன்னோர் சொத்துக்களில் லாபம் கிடைக்கும். பழைய சொத்துப் பிரச்சினைகளில் இன்று உங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அந்நிய தேசத்திலிருந்து வரும் தகவல் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். அதிகார பதவியில் உள்ளவர் களால் உங்களுக்கு நன்மை கிடைக்கும்.
கொடுத்த கடனை வசூலிப்பதில் இன்று நீங்கள் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்களின் சாதுரிய பேச்சின் மூலம் நீங்கள் இன்று அனைவரையும் கவர்வீர்கள். திருமணமாகாத பெண்களுக்கு இன்று நல்ல வரன்கள் வர வாய்ப்பு உள்ளது. இன்று நீங்கள் எப்படிப்பட்ட பிரச்சனையும் சாதுரியமாக தீர்த்து விடுவீர்கள். இன்று நீங்கள் முக்கிய பிரபலங்களை சந்திப்பீர்கள். இன்று உங்களுக்கு வெளிநாட்டு தொடர்புடைய விஷயங்களில் நல்ல ஆர்வம் இருக்கும்.

உங்கள் தன்னிச்சையான முடிவு பலன் கொடுக்கும். மாலை மணி நேரத்திற்குப் பின் உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். சுற்றுலா செல்வதற்கு நீங்கள் இன்று திட்டம் தீட்டுவீர்கள். தாய் தந்தையருக்கு வேண்டியதை நீங்கள் வாங்கிக் கொடுப்பீர்கள். இந்த தொழில் வியாபாரம் செய்பவர்கள் வாடிக்கையாளர்களின் நலன் கருதி நடந்து கொள்வீர்கள். வாடிக்கையாளர்களின் மனம் கருதி நீங்கள் லாபகரமாக தொழில் செய்வீர்கள்.
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இன்று குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் மனதை தளரவிடாதீர்கள். தொழில் ரீதியான கணக்கு வழக்குகளை நீங்கள் இப்போதைக்கு பார்ப்பது வேண்டாம். இன்று சுய தொழில் புரிபவர்களுக்கு மிகவும் நல்ல நாளாக உள்ளது. இன்று நீங்கள் உங்கள் தொழிலை விரிவு
படுத்துவீர்கள். காதலில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். மாணவியர்களுக்கு என்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். கல்விக்காக நீங்கள் எடுக்கும் முயற்சி உங்களுக்கு வெற்றியே கிடைக்கும். உயர்கல்விக்காக முயற்சி செய்யும் மாணவர்கள் இன்னும் அதிக முயற்சி செய்வது நல்லது. பாடத்தை நீங்கள் எழுதிப் பார்ப்பது நல்லது.அரசு தேர்விற்கான தயாராகும் மாணவர்களுக்கும் இன்று நல்லதே நடக்கும். உங்களின் முயற்சியையும் உறுதியையும் நீங்கள் எந்த விதத்திலும் விட்டுவிடக்கூடாது. முக்கிய பணிகளை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடைகள் அணிவது அவசியமாகும்.இன்று நீங்கள் சித்தர் மற்றும் குரு பகவான் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமானதிசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 1 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *