நாளைய (29-01-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம்

29-01-2022, தை 16, சனிக்கிழமை, துவாதசிதிதி இரவு 08.38 வரை பின்பு தேய்பிறைதிரியோதசி.

மூலம் நட்சத்திரம் பின்இரவு02.49 வரை பின்பு பூராடம்.

நாள் முழுவதும்சித்தயோகம்.

நேத்திரம் – 0.

ஜீவன் – 1/2.

சனிப்பிரதோஷம்.

(வாக்கியம்) சிவ வழிபாடுநல்லது.

இராகு காலம் – காலை 09.00-10.30,

எம கண்டம் மதியம் 01.30-03.00,

குளிகன் காலை 06.00-07.30,

சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

நாளைய ராசிப்பலன் –  29.01.2022

மேஷம்

உங்களின் ராசிக்கு எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள்.  குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருந்தார்களின் ஒத்துழைப்பு கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி ஏற்படும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் தாமத பலனே உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண்வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. சுபகாரியங்களை தவிர்க்கவும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு தொழில் ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் குறையும். உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். புதியபொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கிய பிரச்சினைகள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.

கடகம்

உங்களின் ராசிக்கு நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியுடன் முடியும். குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுபசெய்தி கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் உங்கள் பெயர் புகழ், செல்வம், செல்வாக்கு மேலோங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிட்டும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு உறவினர்கள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். பேச்சை குறைத்துக் கொண்டுசெயலில் கவனம் செலுத்துவது நல்லது. தொழிலில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் நல்ல லாபத்தை அடையமுடியும்.

கன்னி

உங்களின் ராசிக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். புதிய முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.

துலாம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ற பதவி உயர்வுகள் கிடைக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பயணங்களால் வெளிவட்டார நட்புகிட்டும். ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு வியாபார ரீதியான நெருக்கடிகளால் மனஅமைதி சற்றுகுறையலாம். பிள்ளைகள் வழியில் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். உறவினர்களுடன் இருந்திருக்கும் வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவுஏற்படும்.

தனுசு

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் நிறைந்திருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.  கடன் பிரச்சினைகள் குறைவதுடன் தேவைகளும் பூர்த்தியாகும். அலுவலகத்தில் உடனிருந்தார்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும்.

மகரம்

உங்களின் ராசிக்கு வரவிற்கேற்ற செலவுகள் இருக்கும். அசையும் அசையா சொத்து ரீதியாக வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

மீனம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பார்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாரட்டப்படும்.  தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *