மீனம் ராசிக்கு…! கடன்கள் வசூலாகும்..! வரவு அதிகரிக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..!
இன்று தெய்வ சிந்தனையால் குடும்பத்தினருடன் புனிதப் பயணங்கள் சென்று மகிழ்வீர்கள்.

கோவில் மற்றும் திருப்பணிகளில் ஈடுபடுவதால் புகழ் ஓங்கி இருக்கும். பொது இடங்களில் நிதானத்தை பேணுங்கள். உங்களுக்கு வரக்கூடிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வீர்கள். தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். பழைய கூட்டாளிகள் விலகினாலும் புதியவர்கள் வந்து இணைவார்கள். உறவினர்களிடமிருந்து அன்பு அதிகரிக்கும். வரவு எதிர்பார்த்தபடி வந்துச்சேரும். நிலுவையிலுள்ள பாக்கிகள் வசூலாகும்.

திருமணம் தொடர்பான முயற்சிகள் வெற்றியளிக்கும். அறிவுத்திறன் அதிகரிக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்லச்செய்தி கிட்டும். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். முக்கியமான பணிகளை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள் இன்றைய நாள் நல்ல நாளாக அமையும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு நிறம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *