துலாம் ராசிக்கு…! அல்ட்சியம் வேண்டாம்..! திட்டங்கள் நிறைவேறும்..!!

துலாம் ராசி அன்பர்களே..!
இன்று தன்னிச்சையாக சில முடிவுகளை எடுப்பீர்கள்.

எடுக்கும் முயற்சிகளிலும் எண்ணற்ற தடைகள் ஏற்படும். எதையும் திட்டமிட்டு செய்யவேண்டும். மனதினை ஒருநிலைப்படுத்த வேண்டும். மன வருத்தத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். காரியத்தில் தாமதம் உண்டாகும். வீன் கவலை ஏற்படும். யாரையும் எடுத்தெறிந்து பேசவேண்டாம். எந்தவொரு காரியத்திலும் அலட்சியம் காட்ட வேண்டாம்.

பெரியோர்களை மதித்து நடக்கவேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஒருவரையொருவர் அனுசரித்து செல்ல வேண்டும். காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கையே கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர் நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். அடர் நீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் அடர்நீல நிறம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *