கடகம் ராசிக்கு…! நெருக்கம் உண்டாகும்..! எண்ணங்கள் மேலோங்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..!
இன்று தைரியம் அதிகரிக்கும்.

அனைத்து செயல்பாடுகளும் அனுகூலமாக அமையும். ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும்.
உத்தியோக உயர்வுக்கான அறிகுறிகள் தோன்றும். கல்யாண கனவுகள் நனவாகும். காரிய வெற்றிக்கு உடன்பிறந்தவர்கள் உதவிகள் செய்வார்கள். தொழில் போட்டியில் விலகிச்செல்லும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். மறைமுகமாக இருந்து எதிர்ப்புகள் விலகிச் செல்லும். மேலதிகாரிகளின் ஆதரவு உண்டாகும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி அமைதி ஏற்படும்.

கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி உண்டாகும். வெளிவட்டாரப் புகழ் ஓங்கி இருக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதையே குறிக்கோளாக மாற்றுவீர்கள். இன்றைய நாள் பிரச்சனையில்லாத நாளாக இருக்கும். தொழிலை விரிவுபடுத்தகூடிய எண்ணங்கள் மேலோங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கும் இன்று நல்ல நாளாக இருக்கும். சக ஊழியர்களின் ஆதரவு உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் இளம்பச்சை நிறம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *