தனுசு ராசிக்கு…! அலைச்சல் உண்டாகும்..! பயணங்கள் அதிகரிக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..!
உற்சாகமிக்க உன்னதமான நாளாக இன்றைய நாள் இருக்கும்.

உடன் பிறப்புகளால் உதவிகள் உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கைகூடி மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். தொழில் வியாபாரத்தில் உள்ளவர்கள் கூடுதலாக லாபம் கிடைக்க பாடுபடுவார்கள். அரசு அதிகாரிகளிடம் கவனமாக நடந்துக்கொள்ள வேண்டும். புதிய வேலைக்கான முயற்சி செய்தவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். வருமானம் வராத வேலையை செய்ய வேண்டாம்.

கேட்ட இடத்தில் கடன் உதவி கிடைக்கும். தெய்வீக நம்பிக்கை கூடும். எடுத்த வேலையை எளிதில் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நேரத்திற்கு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நான் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 3.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *