மிதுனம் ராசிக்கு…! குழப்பங்கள் சரியாகும்..! எச்சரிக்கை தேவை..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று மற்றவர்கள் உங்களை ஏமாற்றுவதற்கு நினைப்பார்கள்.

அவரிடம் தயவுசெய்து விலகியே இருங்கள். உறவுகளுக்குள் குழப்பங்கள் ஏற்படும். மனைவியிடம் பேசும்பொழுதும் எச்சரிக்கையுடன் பேசுங்கள். வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். பணியில் சாதகமான சூழ்நிலை இருக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆன்மீகத்திலும் நாட்டம் செல்லும். இன்று சந்திராஷ்டமம் தினம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்ல வேண்டும்.

அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களிலிருந்த பிரச்சினைகள் சரியாகும். லாபங்கள் குறைந்து காணப்படும். கடுமையான உழைப்பு இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக நடக்க இறைவழிபாடு வேண்டும். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். மாணவர்கள் நிதானத்துடன் இருக்க வேண்டும். விளையாடும் பொழுது எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *