மகரம் ராசிக்கு…! வெற்றி கிடைக்கும்..! மனக்குழப்பம் தீரும்..!!

மகரம் ராசி அன்பர்களே..!
தோல்வியைக் கண்டு அஞ்சாமல் இருக்க வேண்டும்.

தோல்விகளை ஏற்றுக்கொள்வீர்கள். மனப்பக்குவம் சிறப்பாக இருக்கும். அறிவுத் திறனை உயர்த்தி கொள்வீர்கள். இன்று விரோதிகள் விலகிச்செல்லும் நாளாக இருக்கும். வீடு கட்டும் முயற்சியில் வெற்றி உண்டாகும். தந்தை வழியில் ஏற்பட்ட தகராறுகள் விலகிச்செல்லும். புதிய சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகம் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடன் பணிபுரிபவர்களிடம் ஒத்துழைத்து செல்லவேண்டும்.

எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வேலைப்பளு அதிகரிக்கும். நல்ல விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். வீண் அலைச்சலை தவிர்த்துவிடுங்கள். தேவையில்லாத வேலைகளில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டாம். ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். இன்று குழப்பங்கள் அதிகரிக்கும். சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். காதலில் உள்ளவர்கள் எந்தவொரு பிரச்சனையிலும் ஈடுபடாமல் சுமூகமான உறவை நீட்டிக்க வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்துக் காணப்படும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் வெளிர் நீல நிறம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *