கும்பம் ராசிக்கு…! வாய்ப்புகள் அதிகரிக்கும்..! அலைச்சல் ஏற்படும்..!!

கும்பம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு வீண் அலைச்சல் மற்றும் காரியத்தடை வர வாய்ப்பு உள்ளது.

இன்று நீங்கள் அவசரம் அவசரமாக எந்த ஒரு பணியையும் மேற்கொள்ள வேண்டாம். மனதில் அவ்வப் பொழுது இனம்புரியாத குழப்பம் ஏற்படும். தைரியத்தை நீங்கள்தான் வரவழைத்துக் கொள்ள வேண்டும். குறிக்கோளற்ற வீண் அலைச்சல் அவ்வப்பொழுது ஏற்படலாம். ஜீரண சம்பந்தமான பிரச்சனைகள் வரவாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
அஜீரணம் ஏற்படுத்தக் கூடிய எந்த ஒரு உணவையும் உண்ண வேண்டாம். இன்று உங்களுக்கு உடல் சோர்வு ஏற்படும். உற்சாகமாக இருப்பதற்கு நீங்கள்தான் முயற்சி செய்ய வேண்டும். இன்று உங்களுக்கு இடுப்பு மற்றும் தலைவலி வர வாய்ப்பு உள்ளது. முதுகுத்தண்டுயில் வலி வருவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. இன்று உங்களுக்கு பணம் பல வழியில் செலவு வர வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரம் பாதிப்பு பெருமளவு இல்லை.
லாபம் கூட ஓரளவு கையில் வந்து சேரும். பணம் ஓரளவு கையில் கண்டிப்பாக பொருளும். கணவன் மனைவி இருவருக்கும் இடையே பிரச்சினைகள் ஏதுமில்லை. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக வந்து சேரும். வெயிலில் நீங்கள் அதிகப்படியாக சுற்றுவதை குறைத்துக் கொள்வது சிறந்தது. அதிகமாக தண்ணீர் குடிப்பது நல்லது. இன்று காதலில் உள்ளவர்களுக்கு காதல் சிறிது கசப்பாகத்தான் இருக்கும். சில நேரங்களில் அவ்வப்பொழுது வாக்குவாதங்கள் வர வாய்ப்பு உள்ளது. முன்கோபத்தை தவிர்ப்பது சிறந்தது. இன்று மாணவ மாணவியர்களுக்கு உற்சாகம் இல்லாத சூழ்நிலை இருக்கும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். கொஞ்சம் முயற்சி செய்து நீங்கள் பாடங்களை கற்க வேண்டும். படித்த பாடத்தை படித்தபின் எழுதிப் பார்ப்பது மிகவும் நல்லது. இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது பிரவுன் நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது. ப்ரவுன் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் விஷ்ணு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பயனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண் 5 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் பிங்க் மற்றும் பிரவுன் நிறம்.