மகரம் ராசிக்கு…! சிக்கல்கள் தீரும்..! திட்டமிடுதல் வேண்டும்..!!

மகரம் ராசி அன்பர்களே…!
இன்று காரியத்தில் சிறிது தாமதங்கள் ஏற்படும்.

அடுத்தவர்களுக்காக நீங்கள் எந்த ஒரு உத்திரவாதமும் கொடுக்கக் கூடாது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. யாரிடமும் நீங்கள் பணம் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது. வீண் கவலை உங்கள் மனதில் அவ்வப்பொழுது தோன்றும். பண விஷயத்தில் நீங்கள் மனதில் வைத்துக்கொண்டு குழப்பிக் கொண்டு மற்றும் சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. நீங்கள் நிகழ்காலத்தில் இருப்பதற்கு பழகிக் கொள்ளுங்கள். கூடுமானவரை கற்பனை குறைத்துக் கொள்வது நல்லது. நண்பர்கள் மூலம் கிடைக்க வேண்டிய உதவியை சிறிது தாமதப்பட்டு தான் கிடைக்கும்.
நல்லோர் ஒருவர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இன்று உங்களுக்கு அரசாங்கம் மூலம் லாபம் கிட்டும். அரசாங்க துறையில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வெளிநாட்டு துறையில் உள்ளவர்களுக்கும் முன்னேற்றம் உள்ளது. ஏற்றுமதி இறக்குமதி துறையில் உள்ளவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். இன்று உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரம் சீராகவும் சிறப்பாகவும் இருக்கும்.
பழைய பாக்கிகளை நீங்கள் வசூல் செய்வீர்கள். எந்த ஒரு சிக்கல்களும் கண்டிப்பாக தீர்ந்துவிடும். இன்று நீங்கள் எதிர்பார்த்த பதவிகள் கிடைக்கும். இன்று நீங்கள் திட்டமிட்டு பணியாற்றுவீர்கள். இன்று உங்களுக்கு வீண் அலைச்சல் அவ்வப்பொழுது ஏற்படும். இன்று குடும்பத்தைப் பொறுத்தவரை உற்சாகத்திற்கு குறைவில்லை. கணவன் மனைவி இருவருக்கும் இடையே அன்பு அதிகரிக்கும். சிக்கனத்தை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். மிக முக்கியமாக நீங்கள் இரவு நேர பயணத்தை தவிர்ப்பது சிறந்தது. உடமைகள் மீது கவனம் தேவை. காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். இன்று சிறிது காதல் கசக்கும் படியாகத் தான் இருக்கும். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று சிறிது உங்களுக்கு ஞாபக திறன் குறைவாக உள்ளது. கொஞ்சம் முயற்சி செய்து நீங்கள் பாடங்களை கற்க வேண்டும். படித்த பாடத்தை படித்தபின் எழுதிப் பார்ப்பது மிகவும் நல்லது. இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது பழுப்பு நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது. பழுப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
இன்று நீங்கள் விஷ்ணு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பயனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண் 1 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் பழுப்பு நிறம்.