விருச்சிகம் ராசிக்கு…! பணிச்சுமை அதிகரிக்கும்..! கவனம் தேவை..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…!
இன்று உங்கள் குடும்பத்தில் ஏதோ ஒரு பிரச்சினை நிலவிக் கொண்டே இருக்கும்.

மற்றவர்கள் உங்களை விமர்சனம் செய்துகொண்டே இருப்பார்கள். கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு வந்து பின் சரியாகிவிடும். இருவரும் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்துச் செல்லவேண்டும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். பிள்ளைகளுடைய நடவடிக்கை சிறிது மனதிற்கு கவலையை அளிக்கும். பிள்ளைகள் எவ்வாறு படிக்கிறார்கள் என்று அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். இன்று நீங்கள் பக்குவமாக தான் அனைவரிடமும் பேச வேண்டும். பேச்சை நீங்கள் நீதானப் படுத்தினால் மட்டுமே இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு அனைத்து காரியங்களும் சிறப்பாக நடப்பதற்கு இறை அனுபவம் தேவை. இன்று உங்களுக்கு சிறிது மன குழப்பங்கள் ஏற்படும். இன்று உங்கள் குடும்பத்தைப் பற்றிய கவலை இருந்து கொண்டே இருக்கும். நீங்கள் வைத்திருக்கும் வாகனம் உங்களுக்கு சிறிது சிரமத்தை அளிக்கும். புதிய வாகனம் வாங்க கூடிய யோசனையும் உங்களுக்கு இருக்கும். இன்று உங்களுக்கு சிந்தனை திறன் அதிகமாக உள்ளது. கண்டிப்பாக நல்ல எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறிவிடும். தயவு செய்து நீங்கள் குழப்பமடைய வேண்டாம். சிறிது காலதாமதம் ஏற்படும் பின்பு அனைத்தும் சரியாகிவிடும். இப்பொழுது நீங்கள் எந்த ஒரு புதிய விஷயத்தையும் ஒத்தி வைப்பது நல்லது. வெளிநாட்டு தொடர்புடைய விஷயத்தின் முன்னேற்றம் காணமுடியும். இன்று நீங்கள் பயணங்கள் செல்ல நேரிடும். இரவு பயணத்தை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. சக ஊழியர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். பெண்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கிறது. ஆனால் சில விஷயத்தில் நீங்கள் கவனமுடன் இருக்க வேண்டும். அக்கம்பக்கத்தினரிடம் உரையாடும் பொழுது கவனம் தேவை. பொருட்களில் நீங்கள் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மிக முக்கியமாக நகைகளை நீங்கள் கடனாக யாருக்கும் கொடுக்க கூடாது. இல்லத்தில் உங்களுக்கு அதிகப்படியான பணிச்சுமை இருக்கும். இன்று காதலில் உள்ளவர்களுக்கு காதல் சிறிது கசக்கும் படியாகத் தான் இருக்கும். நீங்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும். மாணவியர்களுக்கு எதையும் செய்யக் கூடிய ஆற்றல் உள்ளது. இருந்தாலும் பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது. பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
இன்று நீங்கள் விஷ்ணு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 2 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் பிங்க் நிறம்.